Back
வலைத்தள ஆன்மீகம் டிஜிட்டல் காலத்தில் இறை அனுபவம்

வலைத்தள ஆன்மீகம் டிஜிட்டல் காலத்தில் இறை அனுபவம்

செப்டம்பர் 15, 2026 அன்றுஇ "வலைத்தள ஆன்மீகம்: டிஜிட்டல் காலத்தில் இறை அனுபவம்" என்ற பொருண்மையில் தமிழ்ச் சங்கம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி. பவுலின் ரோஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். தொழில்நுட்பமும் இணையமும் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகத் தேடல் பெற்றுள்ள புதிய பரிமாணங்களை எடுத்துரைத்த அவர்இ எல்லைகளைக் கடந்து ஆன்மீக உரையாடல்களை வளர்க்க டிஜிட்டல் தளங்கள் உதவுவதை விளக்கினார். அதேவேளையில்இ திரைக்குப் பின்னால் சிதறும் கவனத்தைத் தவிர்த்து அக அமைதியைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். வலைத்தள வசதிகளை நற்பண்புகளையும் அறநெறிகளையும் பரப்பும் மேடைகளாக மாற்ற வேண்டும் என்றும்இ டிஜிட்டல் இரைச்சல்களுக்கு மத்தியில் உள்ளார்ந்த இறை அமைதியைக் கண்டடைவதே இன்றைய காலத்தின் ஆன்மீக முதிர்ச்சி என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார். சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்த இந்நிகழ்வுஇ பங்கேற்ற அனைவருக்கும் தெளிவையும் மனநிறைவையும் வழங்கி இனிதே நிறைவுற்றது.