Back
விளையாட்டு எல்லைகளை தாண்டி இதயங்களை இணைக்கும் மொழி

விளையாட்டு எல்லைகளை தாண்டி இதயங்களை இணைக்கும் மொழி

2026 - 2027 கல்வி ஆண்டின் இரண்டாம் தமிழ் சங்க அமர்வானது ஹென்றி நியூமன் குழுவால் 18.08.2026 அன்று தொன்போஸ்கோ அரங்கில் ஜெப வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் “விளையாட்டு எல்லைகளை தாண்டி இதயங்களை இணைக்கும் மொழி” என்ற தலைப்பில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடத்தப்பட்டது. இந்த தமிழ் சங்க அமர்விற்கு சிறப்பு விருந்தினராக அருட்பணி: தாமஸ் மரியராஜ் ச.ச அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். தந்தை அவர்களுக்கு சிறப்பு செய்யும் வண்ணமாக பொன்னாடையும் DBTC தோள்பட்டையும் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் பேச்சாளர்கள் சகோதரர் சாம்சன் மற்றும் ரெய்மண்ட் விளையாட்டு எல்லைகளை தாண்டி இதயங்களை இணைக்கும் மொழி என்பதைப் பற்றி எடுத்து விளக்கினர். சகோதரர்களின் உரையைத் தொடர்ந்து சகோதரர் யோவான் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து அருட்பணி தாமஸ் மரியராஜ் ச.ச அவர்கள் இன்றைய சமுதாயத்தில் நடக்கின்ற விளையாட்டுகள் இதயங்களை இணைக்கும் மொழி, உரிமை மற்றும் கடமைகளை தமது உரையின் மூலம் சகோதரர்களுக்கு எடுத்துக் கூறினார். இவரின் உரை நல்ல கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் புதிய சிந்தனைகளை தூண்டக் கூடியதாகவும் இருந்தது. பிறகு சகோதரர் ஆல்வின் அவர்கள் சகோதரர்களின் ஐயங்களை தீர்த்துக்கொள்ள கலந்துரையாடலை வழி
நடத்தினார். இறுதியாக சகோதரர் தாமஸ் அவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார். தமிழ் சங்கம் 1.00 மணி அளவில் இனிதே நிறைவேறிற்று.