இறையை முன்னிறுத்தும் வலைதளத் தமிழும் இலக்கியத் தமிழும்
«இறையை முன்னிறுத்தும் வலைதளத் தமிழும் இலக்கியத் தமிழும்»; குறித்த சிறப்பான தமிழ் சங்க முதல அமர்வு 14.07.2026 செவ்வாய் கிழமை முற்பகல் 11:30 மணிக்கு பெக்கி தொன் போஸ்கோ இறையியலகத்தில் உள்ள தொன் போஸ்கோ அரங்கில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, அருட்சகோதரர். ராஜ்குமார் அவர்கள் இறைவேண்டல் வழிபாட்டை முன்னின்று வழிநடத்தினார். அன்றைய சிறப்பு விருந்தினர் திரு. மைக்கேல்ராஜ் அவர்களை, கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை. ர்pச்சர்ட் அவர்கள் பொன்னாடை போர்த்தியும், கல்லூரியின் பதிவாளர் அருட்தந்தை. லூர்துசாமி அவர்கள் தோள் துகில் அணிவித்தும் அன்புடன் வரவேற்றனர். முந்தைய தமிழ் சங்க அமர்வின் அறிக்கையை அருட்சகோதரர். டோனி வாசித்தார். தமிழின் வளர்ச்சிக்கும், இலக்கிய ஆற்றலுக்கும் துணைநிற்கும். முந்தைய தமிழ் சங்கத்தின் செயல்பாடுகளை எடுத்துரைக்கும் விரிவான விளக்கங்களையும்; உட்கூறுகளையும் எடுத்து கூறினார். அதனைத் தொடர்ந்து, அருட்சகோதரர். பிரிட்டோ அவர்கள் சிறப்புரையாளரை அவைக்கு தகுந்த முறையில் அறிமுகம் செய்து வைத்தார். சிறப்புரையாளர் திரு. மைக்கேல் ;ராஜ் அவர்கள், «இறையை முன்னிறுத்தும் வலைதளத் தமிழும் இலக்கியத் தமிழும்»; என்ற தலைப்பில். தமிழ் இலக்கியம் காலத்தை வென்றது: வலைத்தலத் தமிழ் தூரத்தை வென்றது. குறித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அறிவும் அனுபவமும் கலந்த அரிய கருத்துகளைப் பகிர்ந்த மதிப்பிற்குரிய பேச்சாளர்கள் சகோதரர்கள் பிரவீன் மற்றும் ஸ்டாலின் அவாகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், சகோதரர்கள் தங்களது ஐயங்களையும், சிந்தனைகளையும் கேள்விகளாக முன்வைத்தனர். இதன் மூலம் இலக்கியத் தமிழும் வலைதளத் தமிழும் இறைச் சிந்தனைகளை எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்கின்றன என்பதைப் பற்றிய தெளிவான புரிதல் அனைவருக்கும் கிடைத்தது. இந்த ஆண்டுக்கான முதல் தமிழ் சங்க அமர்வு இது என்பதால், தமிழ் சங்கத்தின் தலைவர் அருட்சகோதரர். ஆல்வின்; மற்றும் செயலாளர் அருட்சகோதரர். டோனி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்புப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அருட்சகோதரர். ஆட்ரூஸ்; அவர்கள் முழு நிகழ்வையும் திறம்படத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில், அருட்சகோதரர். ஷாஜி அவர்கள் இந்த அறிவார்ந்த அமர்வை ஒருங்கிணைத்தவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார். இறுதியாக, நம் செம்மொழியாம் தமிழின் பெருமை போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அமர்வு பிற்பகல் 1:15 மணிக்கு இனிதே நிறைவுற்றது.