Back
தமிழக திரு அவையில் மரியன்னை பக்தியின் தாக்கம்

தமிழக திரு அவையில் மரியன்னை பக்தியின் தாக்கம்

தமிழக திரு அவையில் மரியன்னை பக்தியின் தாக்கம் குறித்த சிறப்பான தமிழ் சங்க அமர்வு 27.01.2026 செவ்வாய் கிழமை முற்பகல் 11:30 மணிக்கு பெக்கி தொன் போஸ்கோ இறையியலகத்தில் உள்ள தொன் போஸ்கோ அரங்கில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, அருட்சகோதரர். அலெக்ஸ் அவர்கள் இறைவேண்டல் வழிபாட்டை முன்னின்று வழிநடத்தினார். அன்றைய சிறப்பு விருந்தினர் அருள் முனைவர். ஜெகநாதன் அற்புதம், ம.ஊ.ச அவர்களை, கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை. இம்மானுவேல் அவர்கள் பொன்னாடை போர்த்தியும், கல்லூரியின் பதிவாளர் அருட்தந்தை. ஸ்டான்லி அவர்கள் தோள் துகில் அணிவித்தும் அன்புடன் வரவேற்றனர். மூன்றாம் தமிழ் சங்க அமர்வின் அறிக்கையை அருட்சகோதரர். பிரிட்டோ வாசித்தார். “மரியாள் நம்பிக்கையாளர்களின் தாய்” எனும் திருஅவை ஆவணத்தை மையமாக வைத்து அருட்சகோதரர். பிரிட்டோ லியோ விரிவான விளக்கங்களையும் ஆவணத்தின் உட்கூறுகளையும் எடுத்து கூறினார். அதனைத் தொடர்ந்து, அருட்சகோதரர். பிரவீன் அவர்கள் சிறப்புரையாளரை அவைக்கு தகுந்த முறையில் அறிமுகம் செய்து வைத்தார். சிறப்புரையாளர் அருள் முனைவர். ஜெகநாதன் அற்புதம் ம.ஊ.ச அவர்கள், தமிழகச் சூழலில் மரியன்னை பக்தி எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதன் இறையியல் பரிமாணங்கள் குறித்து ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், சகோதரர்கள் தங்களது ஐயங்களையும், சிந்தனைகளையும் கேள்விகளாக முன்வைத்தனர். இதன் மூலம் மரியன்னை பக்தி குறித்த தெளிவான புரிதல் அனைவருக்கும் கிடைத்தது. இந்த ஆண்டுக்கான இறுதி தமிழ் சங்க அமர்வு இது என்பதால், தமிழ் சங்கத்தின் தலைவர் அருட்சகோதரர். அமுதன் மற்றும் செயலாளர் அருட்சகோதரர். பிரிட்டோ லியோ ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்புப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. அருட்சகோதரர். ஆல்வின் அவர்கள் முழு நிகழ்வையும் திறம்படத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில், அருட்சகோதரர். சந்தீப் அவர்கள் இந்த அறிவார்ந்த அமர்வை ஒருங்கிணைத்தவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார். இறுதியாக, நம் செம்மொழியாம் தமிழின் பெருமை போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அமர்வு பிற்பகல் 1:15 மணிக்கு இனிதே நிறைவுற்றது.