அ, ஆ, இ, ஈ திசை காட்ட வரும் குழந்தைகள் ஓர் இறையியல் பார்வை
தொன் போஸ்கோ இறையியலகத்தின் மூன்றாவது தமிழ்ச்சங்க அமர்வானது 2-ம் ஜான்பால் குழுவால் 18.11.25 அன்று தொன்போஸ்கோ அரங்கில் “அ ஆ இ ஈ திசை காட்ட வரும் குழந்தைகள் ஓர் இறையியல் பார்வை” என்ற தலைப்பில் ஜெப வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக திரு.ராபி, ஆசிரியர் தொன்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எழும்பூர், அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். அருட் சகோதரர் ராஜ்குமார் வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினரை வரவேற்று பொன்னாடையும், இறையலகத்தின் தோள்பட்டையும் அணிவிக்கப்பட்டது.அருட் சகோதரர் பிரிட்டோ இரண்டாவது தமிழ் சங்க அறிக்கையினை சமர்ப்பித்தார். இந்நிகழ்வின் முதல் பேச்சாளராக சகோதர். ஜான்சன் அவர்கள் குழந்தைகள் இறையியல் ஒரு முழுமையான கண்ணோட்டம் என்ற தலைப்பில் இன்றைய குழந்தைகளின் நிலை பற்றி எடுத்துரைத்தார். இரண்டாவதாக சகோதரர் ரேமண்ட் அவர்கள் குழந்தைகளும் இறை வெளிப்பாடும் என்ற தலைப்பில் இறைவனின் வெளிப்பாடு குழந்தைகளுக்கு உரியது என்பதனை எடுத்துரைத்தார். சகோதரரின் உரையைத் தொடர்ந்து சகோதரர் அருண் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் ராபி அவர்கள் நவீன காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் சவால்களைப் பற்றியும் அவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம் என்பதை பற்றியும் தனது உரையில் விளக்கினார். இவரின் கருத்துக்கள் குழந்தைகள் மீது புதிய கண்ணோட்டத்தை உருவாக்கியது. பிறகு சகோதரர் அமுதன் அவர்கள் கலந்துரையாடலை வழிநடத்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் சகோதரர் ராஜ்குமார் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழ் சங்க அமர்வானது அருட் சகோதரர் ஆண்டனி பெர்னாண்டஸால் தொகுத்து வழங்கப்பட்டது. அருட்தந்தை அந்தோணி செபாஸ்டின் தமிழ்ச்சங்க அமர்வினை ஒருங்கிணைத்தார். நன்றி உரையினை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் மூன்றாவது தமிழ் சங்கம் 1: 15 மணியளவில் இனிதே நிறைவுற்றது.