கீழடி கூறும் தமிழர் தொன்மை அகழாய்வும் அரசியலும்
தொன் போஸ்கோ இறையியலகத்தின் இரண்டாம் தமிழ்ச்சங்க அமர்வானது 23ஆம் யோவான் குழுவால் 9.9.25 அன்று தொன்போஸ்கோ அரங்கில் ஜெப வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. கீழடி கூறும் தமிழர் தொன்மை அகழாய்வும் அரசியலும் என்ற தலைப்பில் இரண்டாம் தமிழ்ச் சங்க அமர்வானது சிறப்பு விருந்தினராக திருமதி ஸ்டெல்லா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இவர்களுக்கு சிறப்பு செய்யும் வண்ணமாக பொன்னாடையும், இறையலகத்தின் தோள்பட்டையும் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் முதல் பேச்சாளராக சகோதர். ரோகன் அவர்கள் கீழடி அகழாய்வின் முக்கிய அம்சங்களையும் முன்னேற்றங்களையும் பற்றி எடுத்து விளக்கினார். சகோதரரின் உரையைத் தொடர்ந்து சகோதரர் ஞானராஜ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருமதி ஸ்டெல்லா அவர்கள் கீழடி பற்றிய உண்மை நிகழ்வுகளையும் அதில் பொதிந்துள்ள கடினமான உண்மைகளையும் அதில் உள்ள அரசியலையும் பற்றி தனது உரையில் விளக்கினார். இவரின் கருத்துக்கள் புதிய சிந்தனைகளை தூண்டக் கூடியதாக இருந்தது. பிறகு சகோதரர் அமுதன் அவர்கள் கலந்துரையாடலை வழிநடத்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் சகோதரர் ஷாஜி அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நன்றி உரையினை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தமிழ் சங்கம் 1: 15 மணியளவில் இனிதே நிறைவுற்றது.